நடிகர் சூர்யாவின் உஷார் நடவடிக்கை!…

விளம்பரங்கள்

சென்னை:-ஹரியின் சிங்கம்-2 படத்தில் நடித்த பிறகு கெளதம்மேனன் படம்தான் என்பதில் உறுதியாக இருந்தார் சூர்யா. ஆனால், அதையடுத்து அலுவலக பூஜை போடப்பட்டு அடுத்த மாதம் படப்பிடிப்பு ஆரம்பம் என்று அவர்கள் கூறிவந்தனர். அந்நிலையில், கெளதம் சொன்ன கதையில் திருப்தியடையாத சூர்யா அதன்பிறகு சீமான், லிங்குசாமி ஆகியோரிடம் கதை கேட்டார். அதில் லிங்குசாமி சொன்ன கதை பிடித்து விடவே உடனே அவருக்கு கால்சீட் கொடுத்து இப்போது அஞ்சான் என்ற அந்த படத்தில் நடித்து முடித்துவிட்டார்.

இந்நிலையில், ஏற்கனவே ஒரு முறை கதை பிரச்சினை காரணமாக பல மாதங்களாக எந்த படத்தில் நடிப்பது என்பது புரியாமல் குழம்பிப்போன சூர்யா, இப்போது உஷாராகி விட்டார். அதாவது ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே அடுத்து எந்த டைரக்டரின் படத்தில நடிப்பது என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்கிறார்.அந்த வகையில், அஞ்சானில் நடித்தபோது அடுத்து வெங்கட்பிரபு இயக்கும் மாஸ் படத்தில் நடிப்பது என்று முடிவெடுத்த சூர்யா, இப்போது அந்த படத்தின் படப்பிடிப்பில் இறங்கிவிட்டார். இந்த நேரத்தில் அதற்கடுத்து தான் யார் இயக்கத்தில் நடிப்பது என்பதையும் தற்போது முடிவு செய்திருக்கிறார்.

அதுபற்றி சூர்யா தரப்பு வெளியிட்டுள்ள செய்தியில், மாஸ் படத்தை முடித்ததும், தமிழில் மாதவன் நடித்த யாவரும் நலம் மற்றும் சமீபத்தில் தெலுங்கில் வெளியான மனம் படங்களை இயக்கிய விக்ரம்குமார் சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.அவர் சொன்ன கதையை கேட்டு முழு திருப்தி அடைந்த சூர்யா, தனது 2டி நிறுவனம் மூலமே அந்த படத்தை தயாரித்து நடிக்கவும் முடிவு செய்திருக்கிறாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: