உலகில் பெரும்பணக்காரர்கள் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 8ம் இடம்!…

விளம்பரங்கள்

லண்டன்:-புதிய உலக மதிப்பு அமைப்பு வெளியிட்டுள்ள 10 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் வைத்துள்ளவர்கள் பட்டியலில் இந்தியருக்கு 8வது இடம் கிடைத்துள்ளது.இப்பட்டியலில் அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகளுடன் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. அதே சமயம் சிங்கப்பூர் மற்றும் கனடாவை விட இந்தியா உயர்வான இடத்தை பிடித்துள்ளது.

இப்பட்டியலில் 1,83,500 பேருடன் அமெரிக்க முதலிடத்தையும், 26,600 பேருடன் சீனா இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன. இந்நாடுகளுக்கு அடுத்தபடியாக முறையே ஜெர்மனி, பிரிட்டன், ஜப்பான், சுவிட்சர்லாந்து, மற்றும் ஹாங்காங் நாடுகள் இடம்பிடித்துள்ளன. இதற்கடுத்து எட்டாவதாக இந்தியா அணி இடம்பிடித்துள்ளது. இந்தியாவில் 14,800 கோடீஸ்வர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது போல் பெருநகரங்களில் உள்ள கோடீஸ்வர்கள் குறித்த பட்டியலில் 30 நாடுகளுடன் இந்திய நகரமான மும்பையும் இடம்பிடித்துள்ளது. அதிகபட்சமாக மும்பையில் 2700 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதிகபட்சமாக 15400 கோடீஸ்வரர்களுடன் ஹாங்காங் முதலிடம் பிடித்துள்ளது. அதற்கடுத்தபடியாக 14300 பேர் நியூயார்க்கிலும், லண்டனில் 9700 பேரும், மாஸ்கோவில் 7600 பேரும், லாஸ் ஏஞ்சல்ஸ்சில் 7400 பேரும், சிங்கப்பூரில் 6600 பேரும் கோடீஸ்வரர்களாக உள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: