இந்தியா-இங்கிலாந்து ஒருநாள் தொடர்: இந்திய அணி அறிவிப்பு!…

விளம்பரங்கள்

மும்பை:-இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் வரும் 19ம் தேதி முடிவடைகிறது. அதைத்தொடர்ந்து 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டி நடக்க உள்ளது. ஆகஸ்ட் 25ம் தேதி ஒருநாள் தொடர் தொடங்குகிறது.

இத்தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் தோனி, விராத் கோலி, ஷிகர் தவான், ரோகித் சர்மா, அஜிங்கிய ரகானே, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஸ்டூவர்ட் பின்னி, புவனேஸ்வர் குமார், முகமது சமி, மோகித் சர்மா, அம்பாதி ராயுடு, உமேஷ் யாதவ், தவால் குல்கர்னி, சஞ்சு ஷர்மா மற்றும் கரண் ஷர்மா ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இதில் சஞ்சு ஷர்மா, கரண் ஷர்மா ஆகிய இருவரும் முதன் முறையாக இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். அணியில் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட புஜாரா, கவுதம் காம்பீர், யுவராஜ் சிங் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: