அரசியல்,செய்திகள்,விளையாட்டு காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற இந்தியர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!…

காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற இந்தியர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!…

காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற இந்தியர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!… post thumbnail image
புதுடெல்லி:-ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 20-வது காமன்வெல்த் விளையாட்டு திருவிழா கடந்த 23-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது.இங்கிலாந்தின் ராணி இரண்டாம் எலிசபெத் போட்டியை தொடங்கி வைத்தார். 71 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற இந்த போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

இந்தியா சார்பில் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்ற இந்திய வீரர்-வீராங்கனைகள் 15 தங்கம், 30 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தம் 64 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் இந்தியாவை 5-வது இடத்தில் நிறுத்தி நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இந்த அசத்தலான வெற்றி தொடர்பாக இன்று அறிக்கை வெளியிட்டு பதக்கங்களை வென்ற வீரர்-வீராங்கனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.2014- காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் நமது வீரர்-வீராங்கனைகளின் செயல்திறன் நம்மை பெருமைப்படுத்தியுள்ளது. பதக்கங்களை வென்றவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் என்று அந்த வாழ்த்து செய்தியில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி