செய்திகள்,திரையுலகம் கர்நாடகாவில் லிங்கா க்ளைமேக்ஸ்!…

கர்நாடகாவில் லிங்கா க்ளைமேக்ஸ்!…

கர்நாடகாவில் லிங்கா க்ளைமேக்ஸ்!… post thumbnail image
சென்னை:-கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும் படம் ‘லிங்கா’.இதில் சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா ஆகிய இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். இவர்கள் தவிர பிரபு, ராதாரவி, விஜயகுமார், ஆர்.சுந்தர்ராஜன், சந்தானம், கருணாகரன், தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு, தேவ் கில் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார். இந்நிலையில் ‘லிங்கா’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிமோகாவில் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி அங்கு படமாகிறதாம்.

ஆகஸ்ட் 18ல் தொடங்கும் இந்த படப்பிடிப்பில் அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா இருவரும் கலந்துகொள்ள இருக்கிறார்கள். ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி ‘லிங்கா’வை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு, வேலைகளை துரிதப்படுத்தியுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி