செய்திகள்,பரபரப்பு செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் ஆப்பிரிக்காவை அச்சுறுத்தும் எபோலா வைரஸ் தாக்குதலுக்கு அமெரிக்காவில் மருந்து உள்ளதாக தகவல்!…

ஆப்பிரிக்காவை அச்சுறுத்தும் எபோலா வைரஸ் தாக்குதலுக்கு அமெரிக்காவில் மருந்து உள்ளதாக தகவல்!…

ஆப்பிரிக்காவை அச்சுறுத்தும் எபோலா வைரஸ் தாக்குதலுக்கு அமெரிக்காவில் மருந்து உள்ளதாக தகவல்!… post thumbnail image
ஆப்பிரிக்கா:-மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் எபோலா என்ற வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. 2014ம் ஆண்டில், கினியா, லைபீரியா மற்றும் சியர்ரா லியோன் ஆகிய நாடுகளில் மிக அதிகமாக 1,201 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில், 672 பேர் பலியாகி உள்ளனர் என்று ஐ.நா. உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.இந்த வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன. பாதிப்பிற்கு தீர்வு காண்பது எளிதல்ல என்பதால் மேற்கு நாடுகளில் இருந்து இங்கிலாந்திற்கு வைரஸ் பாதிப்பு தொற்று பரவுவதை தடுக்க அந்நாட்டின் சுகாதார துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவுடன் ஆரம்பத்தில் காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு என தொடங்கி தலைவலி வரை சென்று அதன் பின்பு வாய், மூக்கு, காது என முக்கிய பாகங்களில் இருந்து ரத்தம் வெளியேறி பாதிக்கப்பட்டவர் மரணம் அடையும் நிலை உள்ளது.இந்த வைரஸ் தாக்குதலுக்கு மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருக்க கூடும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.எனினும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் கவனம் இன்றி இருந்தால் அவர்களும் நோய் பாதிப்புக்கு ஆளாகி பலியாகும் சூழல் காணப்படுகிறது. லைபீரியா நாட்டில் தங்கி அங்கு சிகிச்சை அளித்து வந்த 2 அமெரிக்க மருத்துவர்கள் வைரஸ் தாக்குதலால் பாதிப்படைந்தனர்.

அவர்களில் டாக்டர் கென்ட் பிராண்ட்லியும் ஒருவர். பிராண்ட்லி தனக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டதை அறிந்தவுடன் அதில் இருந்து விடுபட திரவ வடிவிலான மருந்தை உட்கொண்டிருக்கிறார். இந்த மருந்து அமெரிக்காவில் இருந்து ரகசியமாக அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.இதில் ஓரளவு அவர் பலன் பெற்றார். உடனடியாக மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு திரும்பியுள்ளார். ஆனால், வைரஸ் தாக்குதலில் இருந்து அவரால் முற்றிலும் விடுபட முடியாமல் பலியானார். மற்றொரு பெண் மருத்துவரான ரைட்போல் என்பவரும் சிகிச்சை பெற்று வருகிறார்.அவரது நிலைமை குறித்த விவரம் வெளியிடப்படவில்லை. எனினும் அவருக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் ஜே வர்க்கீ உள்ளிட்ட மருத்துவர்கள் அடங்கிய தொற்று நோய் சிறப்பு சிகிச்சை குழு அட்லாண்டா மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறது.

இசெட்மேப் என்ற பெயரிலான இந்த மருந்து தேசிய சுகாதார அமைப்பினரால் அவர்களுக்கு அளிக்கப்பட்டு உள்ளது. மருத்துவர்களால் முழுமையாக பரிசோதனை செய்யப்படாததால் தவறாக அதனை எடுத்து கொள்ளும் சிக்கல் உள்ளது.மனிதர்கள் அல்லாத விலங்குகளிடம் நடத்திய பரிசோதனையில் 100 சதவீதம் பாதுகாப்பினை இந்த மருந்து அளித்துள்ளது. வைரஸ் பாதிப்பு தாக்கியவுடன் தொடர்ந்து 104 முதல் 120 மணிநேரம் அளிக்கப்படும் சிகிச்சையால் மனிதர்கள் அல்லாத விலங்குகளில் 43 சதவீதம் மீண்டு வந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது. மனிதர்களில் இந்த மருந்து குறித்து முழுமையான அளவில் சோதனை நடத்தப்படவில்லை.எனவே, அமெரிக்க மருத்துவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பலனளிக்கிறது என தெரிய வந்தால், வைரஸ் தாக்குதலால் அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ள நிதி வசதி குறைந்த ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் மக்களுக்கு இதனை பயன்படுத்தி அவர்களை மரணத்தில் இருந்து காப்பாற்றலாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி