பிரபல நடிகர் தனுஷ் கைது செய்யப்பட்டதாக வதந்தி!…

விளம்பரங்கள்

சென்னை:-வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷ் ஒரு காட்சியில், தம்பிய கான்வென்டுல படிக்க வச்சீங்க. என்னை ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியிலதான் படிக்க வச்சீங்க என்று தனக்கு அப்பாவாக நடித்துள்ள டைரக்டர் சமுத்திரகனியைப்பார்த்து கேட்பார் தனுஷ். இந்த டயலாக், அந்த பள்ளியில் படிப்பதை மட்டமாக சித்தரிப்பது போன்று இருந்ததால் அப்படம் வெளியே வந்ததில் இருந்தே ராமகிருஷ்ணா பள்ளி வட்டாரங்களை கொதிப்படைய செய்து விட்டது.

அதனால், அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களை தனுஷ் அவமானப்படுத்தி விட்டதாக குற்றம் சாட்டி அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு இந்து மகா சபையினர் தனுஷின் வீட்டை முற்றுகையிட்டு கொடி பிடித்தனர். இப்படி தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவிக்கொண்டிருக்கிறது.இதையடுத்து, நேற்று திடீரென்று தனுஷ் கைது செய்யப்பட்டதாக காட்டுத்தீபோல் செய்தி பரவியது. ஆனால் அதுபற்றி விசாரித்தபோது, அப்படி எதுவும் நடக்கவில்லை. அது வெறும் வதந்தி என்று தெரிவிக்கப்பட்டது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: