சமந்தாவின் கவர்ச்சியால் எனக்கு ஆபத்தில்லை – ஹன்சிகா!…

விளம்பரங்கள்

சென்னை:-அஞ்சான், கத்தி படங்களில் கவர்ச்சிப்புயலாக உருவெடுத்து நிற்கிறார் சமந்தா. அதோடு அடுத்து தமிழில் முழுக்கவனம் செலுத்தி, ஆந்திராவைப்போலவே தமிழிலும் நம்பர்-ஒன் நடிகை நாற்காலியில் உட்கார்ந்து விட வேண்டும் என்று முடிவெடுத்து விட்டார். இதனால் கோடம்பாக்கத்தில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் நயன்தாரா, ஹன்சிகா உள்ளிட்ட முன்வரிசை நடிகைகள் பலத்த அதிர்ச்சியில் இருப்பதாக செய்தி பரவியுள்ளது.

ஆனால், இதுபற்றி ஹன்சிகாவைக்கேட்டால், என்னுடைய மார்க்கெட் எப்போதும் போல் இப்போதும் ஸ்டெடியாகவே உள்ளது. மேலும், எனக்கென்று ஒரு ரசிகர் வட்டமும் உள்ளது. அதனால் என்னையெல்லாம் அத்தனை எளிதில் யாரும் வீழ்த்தி விட முடியாது. மேலும், எனது பாடி லாங்குவேஜ்க்கு நான் ஓரளவு மாடர்ன் உடையணிந்தாலே கிளாமராகவே தெரிவேன்.

அதேசமயம், போட்டி என்று வருகிறபோது இன்னும் கவர்ச்சி ஏரியாவில் இறங்கி அடிப்பேன் அதனால் சமந்தாவின் கவர்ச்சி பிரவேசத்தினால் எனக்கு எந்த பயமும் இல்லை என்று சொல்லும் ஹன்சிகா, தற்போது நான் பர்பாமென்சுக்கு முக்கியத்துவம் கொடுத்துதான் படங்களை செலக்ட் பண்ணுகிறேன். அதேசமயம், அந்தமாதிரி படங்களிலும் முடிந்தவரை கிளாமராகவும் நடித்துதான் வருகிறேன். இது எனக்கான கிளாமர் ரசிகர்களை தக்க வைத்துக்கொள்ளும் ஒரு முயற்சிதான் என்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: