அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் நியூயார்க்கில் அமெரிக்கவாழ் இந்தியர்கள் கூட்டத்தில் பேசுகிறார் மோடி!…

நியூயார்க்கில் அமெரிக்கவாழ் இந்தியர்கள் கூட்டத்தில் பேசுகிறார் மோடி!…

நியூயார்க்கில் அமெரிக்கவாழ் இந்தியர்கள் கூட்டத்தில் பேசுகிறார் மோடி!… post thumbnail image
வாஷிங்டன்:-அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் அழைப்பை ஏற்று அடுத்த மாதம் அமெரிக்கா செல்லும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க ‘வெளிநாட்டு வாழ் பாரதீய ஜனதா நண்பர்கள்’ அமைப்பு ஏற்பாடு செய்து உள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மாடிசன் கார்டன் வளாக திடலில் ஆயிரக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச இருப்பதாக அந்த அமைப்பினர் தெரிவித்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி