செய்திகள்,திரையுலகம் ஜிகர்தண்டா படம் பற்றி கருத்து சொல்லாத பிரபலங்கள்!…அதிர்ச்சியில் நடிகர் சித்தார்த்…

ஜிகர்தண்டா படம் பற்றி கருத்து சொல்லாத பிரபலங்கள்!…அதிர்ச்சியில் நடிகர் சித்தார்த்…

ஜிகர்தண்டா படம் பற்றி கருத்து சொல்லாத பிரபலங்கள்!…அதிர்ச்சியில் நடிகர் சித்தார்த்… post thumbnail image
சென்னை:-பீட்சா இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த்லட்சுமிமேனன் நடித்துள்ள படம் ஜிகர்தண்டா. கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்த திரையிடப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.இந்நிலையில், அப்படக்குழு சார்பில் சினிமா உலகின் முக்கியத்துவம் வாய்ந்தவர்களுக்கு படத்தை திரையிட்டு காண்பித்து வருகின்றனர்.

சித்தார்த் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் காவியத்தலைவன் படத்தை இயக்கியுள்ள வசந்தபாலன், வெற்றிமாறன், துரை செந்தில்குமார், எழுத்தாளர் ராமகிருஷ்ணன் உள்பட பலர் ஜிகர்தண்டா படத்தை பார்த்துள்ளனர்.ஆனால், படம் பார்த்து விட்டு வெளியே வரும்போது, அவர்களிடம் படத்தைப்பற்றி கருத்து கேட்டுள்ளனர். ஆனால் யாருமே எதுவுமே சொல்லாமல் சென்று விட்டார்களாம். ஒரு சம்பிரதாயத்திற்காகவாவது நல்லாயிருக்கு என்ற வார்த்தையைகூட அவர்கள் சொல்லாமல் நழுவியதால் கடும் அதிர்ச்சியில் இருக்கிறாராம் சித்தார்த்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி