செய்திகள்,திரையுலகம் ஒரே படத்தில் இணைந்தும் சேர்ந்து நடிக்காத திரிஷா-அனுஷ்கா!…

ஒரே படத்தில் இணைந்தும் சேர்ந்து நடிக்காத திரிஷா-அனுஷ்கா!…

ஒரே படத்தில் இணைந்தும் சேர்ந்து நடிக்காத திரிஷா-அனுஷ்கா!… post thumbnail image
சென்னை:-அஜீத்தின் 55வது படத்தில் திரிஷா, அனுஷ்கா இவர்கள் இருவருமே இணைந்து நடிக்கிறார்கள். அப்படியென்றால் யாருக்கு கதையில் முக்கியத்துவம் என்று கேட்டால், இரண்டு பேருக்குமே சரிசமமான வேடங்களே கொடுக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். புலனாய்வு அதிகாரியாக நடித்திருக்கும் சால்ட் அண்ட் பெப்பர் அஜீத்துக்கு ஜோடி அனுஷ்கா நடித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் ஒரு டூயட் உள்ளது.

அதேபோல் இளவட்ட அஜீத்துக்கு ஜோடியாக அதாவது ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்கும் த்ரிஷாவுக்கும் ஒரு டூயட் பாடல் உள்ளது. அது மட்டுமின்றி, கதையில் இருவருக்குமே சமபங்கு இருப்பதோடு, காட்சிகள்கூட கிட்டத்தட்ட ஒரே அளவாகத்தான இருக்கும் என்கிறார்கள். இதற்கெல்லாம் மேலாக, த்ரிஷாவின் கேரக்டர் ப்ளாஷ்பேக்கில் வந்து செல்வதால், அவர்கள் இருவரும் ஒரு காட்சியில்கூட சேர்ந்து நடிக்கவில்லையாம். அதனால் இதுவரை படப்பிடிப்பில்கூட அவர்கள் இருவரும் சந்தித்துக்கொண்டதில்லையாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி