பசுபதிநாத் ஆலயத்துக்கு பிரதமர் மோடி 2,500 கிலோ சந்தனக்கட்டை நன்கொடை!…

விளம்பரங்கள்

காத்மாண்டு:-2 நாள் அரசு முறைப் பயணமாக நேபாளம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று அங்குள்ள பழமை வாய்ந்த பசுபதிநாத் ஆலயத்தில் வழிபாடு செய்தார்.ஆலய நிர்வாக கமிட்டி மற்றும் அர்ச்சகர்களின் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

கழுத்தில் ருத்திராட்ச மாலையுடன் காவி உடையணிந்து வந்திருந்த பிரதமர் மோடி, பசுபதிநாதரை சில நிமிடங்கள் அமைதியாக வணங்கி வழிபாடு செய்தார். பசுபதிநாத் ஆலயத்துக்கு பிரதமர் மோடி 2,500 கிலோ சந்தனக் கட்டையை நன்கொடையாக வழங்கியுள்ளதாக ஆலய நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: