குருவிக்காரன் சோலை: முக்கிய வேடத்தில் நடிக்கும் சீமான் – பவர்ஸ்டார்…!

விளம்பரங்கள்

யுவபிரியா கிரியேஷன் சார்பில் யுவபிரியா பெருமையுடன் தயாரிக்கும படம் ‘குருவிக்காரன் சோலை’. இதில் நாயகன், நாயகியாக புதுமுகங்கள் ஜெய்காந்த், கிரிஷா நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் சீமான், பவர்ஸ்டார், வையாபுரி, சுகன்யா, யுவராணி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் எஸ்.நாதன். படத்தை பற்றி இயக்குனர் கூறும்போது, தன் குடும்பத்திற்காக காதலனை பழிவாங்குகிறார் காதலி, இதில் காதலி, காதலனை கொல்லமாட்டாள். மாறாக வேறொரு தண்டனையை காதலனுக்கு தருகிறாள். அது என்ன? என்பது படத்தின் கிளைமாக்ஸ் என்றார்.

படத்திற்கு தஷி இசையமைக்கிறார். ரவிச்சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் தொடங்கி, குற்றாலம், தலக்கோணம் ஆகிய பகுதிகளில் முழுவீச்சில் நடைபெறவுள்ளது. இரண்டு பாடல் காட்சிகளுக்காக மட்டும் இக்குழு மலேசியா செல்லவுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: