செய்திகள்,திரையுலகம் பரபரப்பை ஏற்படுத்திய சூப்பர் ஸ்டாரின் நிர்வாண போஸ்டர்!…

பரபரப்பை ஏற்படுத்திய சூப்பர் ஸ்டாரின் நிர்வாண போஸ்டர்!…

பரபரப்பை ஏற்படுத்திய சூப்பர் ஸ்டாரின் நிர்வாண போஸ்டர்!… post thumbnail image
மும்பை:-பெரும்பாலும் சினிமாவில் சன்னிலியோன் போன்ற சில நடிகைகள்தான் நிர்வாண காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். ஆனால் நடிகர்கள் யாரும் அந்த மாதிரி நடிப்பதில்லை. ஆனால், அமீர்கான் நடிப்பில் வெளியாகயிருக்கும் படம் பி.கே. இந்த படத்தின் போஸ்டரில் அமீர்கான் நிர்வாணமாக நிற்கும் காட்சிகள் இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் கையில் ஒரு டேப்ரெக்கார்டரை வைத்து தனது முன்பக்கத்தை மறைத்துக்கொண்டு நிற்கிறார். இதனால் அமீர்கானின் மானம் காப்பாற்றப்பட்டுள்ளது.

இந்த போஸ்டர் இணையதளங்களில் வெளியானதை அடுத்து பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அதோடு சில ரசிகர்கள் அமீர்கானின் நிர்வாண கோலத்தைப்பார்த்து ஏராளமான கமெண்ட்டுகளை கொடுத்து வருகின்றனர். குறிப்பாக, சன்னிலியோன், பூனம் பாண்டே உள்ளிட்ட கவர்ச்சி நடிகைளுக்கு போட்டியாக அமீர்கான் இந்த கோலத்தில் களமிறங்கியிருப்பதாக கேலியும், கிண்டலும் கலந்து ஏராளமான கமெண்டுகளை கொடுத்து வருகின்றனர்.இதற்கு அமீர்கான் வெளியிட்டுள்ள அவசர செய்தியில், இப்படியொரு காட்சி அந்த படத்திற்கு அவசியம் தேவைப்பட்டது.

அதன்காரணமாகவே இமேஜ் பறறி கவலைப்படாமல் நடித்தேன். மேலும், படம் திரைக்கு வரும்போது இப்படியொரு காட்சியில் நான் நடித்தது அவசியம்தான் என்று ரசிகர்கள் அனைவருமே சொல்வார்கள் என்று கூறியுள்ளார் அமீர்கான்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி