செய்திகள்,திரையுலகம் நான் அழகான பெண் இல்லை – நடிகை லட்சுமிமேனன் ஓப்பன் டாக்!…

நான் அழகான பெண் இல்லை – நடிகை லட்சுமிமேனன் ஓப்பன் டாக்!…

நான் அழகான பெண் இல்லை – நடிகை லட்சுமிமேனன் ஓப்பன் டாக்!… post thumbnail image
சென்னை:-லட்சுமி மேனன் நடித்துள்ள ஜிகிர்தண்டா நேற்று ரிலீசானது. இதில் கயல்விழி என்ற இட்லி விற்கும் மதுரை பெண்ணாக நடித்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: ஜிகிர்தண்டா எனக்கு ஸ்பெஷலான படம். காரணம் எனக்கு பிடித்த ஹீரோ சித்தார்த்துடன் நடித்திருக்கிறேன். என்னைத் தேடி எளிமையான பெண் கேரக்டர்களே வருகிறது. அதனை நானும் ஏற்றுக் கொள்கிறேன். எனக்கு கனவு கேரக்டர் என்று எதுவும் கிடையாது.

நான் சினிமாவுக்கு வந்ததும், ஜெயித்ததும் அதிர்ஷ்டத்தால்தான் என்பது எனக்குத் தெரியும். நான் அத்தனை அழகான பெண் இல்லை என்பதும் தெரியும். என்னை விட அழகான, திறமையான பெண்கள் சினிமாவுக்குள் வரமுடியாமல் தவிக்கிறார்கள். அவர்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை அவ்வளவுதான். என்கிறார் லட்சுமி மேனன்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி