செய்திகள்,திரையுலகம் நடிகர் தனுஷ் புகைப்பிடிக்கும் போஸ்டர்கள் கிழிப்பு!…

நடிகர் தனுஷ் புகைப்பிடிக்கும் போஸ்டர்கள் கிழிப்பு!…

நடிகர் தனுஷ் புகைப்பிடிக்கும் போஸ்டர்கள் கிழிப்பு!… post thumbnail image
சென்னை:-தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள வேலையில்லா பட்டதாரி படத்தில் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியை மட்டமாக சித்தரித்து தனுஷ் வசனம் பேசி நடித்திருப்பதாக எதிர்ப்புகள் எழுந்துள்ளது. இதற்கு அப்பட டைரக்டர் வேல்ராஜ் வருத்தம் தெரிவித்தபோதும், அது சம்பந்தமாக நீதிமன்றத்தை அணுகப்போவதாக அந்த பள்ளி நிர்வாகம் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே தனுஷ் புகைப்பிடிப்பது போன்று சென்னை நகரமெங்கும் ஒட்டப்பட்ட போஸ்டர்களும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுகுறித்து புகையிலை கட்டுப்பாட்டு வாரியம் சுகாதாரத்துறையிடம் புகார் அளித்தது. அதையடுத்து அந்த போஸ்டர்களை உடனடியாக நீக்குமாறு அப்படக்குழுவுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது.அதனால் தற்போது அந்த போஸ்டர்கள் அனைத்தையும் கிழித்து அகற்றியுள்ளனர். பல இடங்களில் அதே இடத்தில் வேலையில்லா பட்டதாரி படத்தின் வேறு போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி