செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் தலைநகரில் படமாகும் ரஜினி – சோனாக்ஷி டூயட்…!

தலைநகரில் படமாகும் ரஜினி – சோனாக்ஷி டூயட்…!

தலைநகரில் படமாகும் ரஜினி – சோனாக்ஷி டூயட்…! post thumbnail image
கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி, அனுஷ்கா , சோனாக்ஷி சின்ஹா நடித்து வரும் படம் ‘லிங்கா’. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி அன்று ‘லிங்கா’ படத்தை வெளியிட முடிவு செய்துள்ள படக்குழுவினர் இரண்டு கட்ட படப்பிடிப்புகளை ஹைதராபாத்தில் முடித்துவிட்டு தற்போது சென்னை வந்துள்ளனர்.சென்னையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பாக ரஜினி, சோனாக்‌ஷி சின்ஹா இடம்பெறும் பாடல் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.

ரஜினி பல கெட்டப்களில் தோன்றவிருக்கும் இந்த டூயட் பாடல் காட்சியைத் தொடர்ந்து சந்தானம், கருணாகரன் இடம்பெறும் சில காமெடி காட்சிகளும் படமாக்கப்பட உள்ளன.

சென்னையில் நடக்கவிருக்கும் இந்த படப்பிடிப்பில் ராதாரவி, ஜெகபதி பாபு, ஆர்.சுந்தர்ராஜன், தேவ் கில் , மனோபாலா உள்ளிட்ட நடிகர்களும் பங்கேற்க உள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி