செய்திகள் ஜெர்மனியில் பயணிகள் ரெயில் மீது சரக்கு ரெயில் மோதல்!…

ஜெர்மனியில் பயணிகள் ரெயில் மீது சரக்கு ரெயில் மோதல்!…

ஜெர்மனியில் பயணிகள் ரெயில் மீது சரக்கு ரெயில் மோதல்!… post thumbnail image
பெர்லின்:-தெற்கு ஜெர்மனியில் உள்ள மன்ஹெய்ம் என்ற ரெயில் நிலையத்தின் அருகில் நேற்று இரவு சரக்கு ரெயிலுடன் பயணிகள் ரெயில் ஒன்று மோதியதில் அதில் பயணித்த 35 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 14 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 4 பேரின் நிலைமை மோசமாக உள்ளது என்றும் அந்த ரெயிலின் ஆபரேட்டரான டுயட்ஸ் பன் தெரிவித்துள்ளார்.

250 பேருடன் வந்துகொண்டிருந்த பயணிகள் ரெயிலானது ஆஸ்திரியாவின் கிராஸ் நகரிலிருந்து பிரான்ஸ் எல்லைக்கு அருகில் உள்ள சார்புரூகேன் என்ற ஜெர்மானிய நகரத்திற்கு சென்றுகொண்டிருந்தது. அதுபோல் ஈஆர்எஸ் குழுமத்திற்கு சொந்தமான சரக்கு ரெயிலானது ஹங்கேரி நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது. திடீரென இரண்டு ரெயில்களும் மோதிக்கொண்டன.

இதில் பயணிகள் ரெயிலின் ஐந்து பெட்டிகள் தடம் புரண்டதாகத் தகவல்கள் தெரிவித்தன. அதன்பின்னர் வெளிவந்த செய்திகளில் விபத்து நடந்த இடத்தின் சீரமைப்புப் பணி நிறைவு செய்யப்பட்டது என்று குறிப்பிடப்பட்ட போதிலும் மன்ஹெயம் ரயில் நிலையம் போக்குவரத்திற்கு மூடப்பட்டு இருப்பதாகக் கூறப்பட்டிருந்தது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி