செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் உலகநாயகனின் மனைவியான நடிகை ஊர்வசி…!

உலகநாயகனின் மனைவியான நடிகை ஊர்வசி…!

உலகநாயகனின் மனைவியான நடிகை ஊர்வசி…! post thumbnail image
கமலின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் பிடித்த நாயகிகள் வரிசையில் நடிகை ஊர்வசியும் ஒருவர். ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘அந்த ஓர் நிமிடம்’, ‘மகளிர் மட்டும்’, ‘பஞ்சதந்திரம்’, ‘மன்மதன் அம்பு’ என கமலின் பெரும்பாலான படங்களில் ஊர்வசியும் இடம்பெற்றிருப்பார்.

தற்போது கமலின் தயாரிப்பில் ரமேஷ் அரவிந்த் இயக்கும் ‘உத்தம வில்லன்’ படத்தில் கமலுக்கு மனைவியாக நடித்திருக்கிறார் ஊர்வசி.” இந்தப் படத்தில் எனக்கும் கமலுக்கும் பெரிதாக காமெடி காட்சிகள் இருக்காது ஆனால் சுற்றி இருக்கும் அனைத்து நடிகர்களும் எங்கள் இருவருக்கும் பதிலாக எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு காமெடியாக நடித்துள்ளனர்.

முழு படப்பிடிப்பும் முடிந்து விட்டது. தற்போது போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன ” என்று கூறியிருக்கிறார் ஊர்வசி.

அக்டோபர் 2ம் தேதி படம் வெளியிடப்படும் என அறிவித்திருக்கும் நிலையில் படத்தின் பாடல்கள் செப்டம்பர் முதல் வாரத்தில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி