கத்தி படத்துக்காக நெடுமாறன், சீமான், திருமாவைச் சந்தித்த ஏ.ஆர்.முருகதாஸ்!…

விளம்பரங்கள்

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிக்கும் படம் ‘கத்தி‘.அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தினை ஐங்கரன் இண்டர்நேஷனல் மற்றும் லண்டனைச் சேர்ந்த லைகா நிறுவனம் இணைந்து தயாரித்து வருகின்றன. கத்தி படத்தின் படப்பிடிப்பு கோல்கட்டா, ஐதராபாத், சென்னை ஆகிய ஊர்களில் பரபரப்பாக நடைபெற்று வந்தது. செப்டம்பரில் இசை, தீபாவளிக்கு படம் என்று ‘கத்தி’ இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தை தயாரித்து வரும் லைக்கா நிறுவனம், ராஜபக்சே ஆதரவு பெற்ற நிறுவனம் என்று படம் தொடங்கப்பட்ட போதே செய்திகள் வெளியாகின. ஆனால் இதனை தயாரிப்பு நிறுவனம் மற்றும் படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மறுத்தார்கள். தற்போது மீண்டும் இப்பிரச்னை தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது. அதனால லைக்கா’ நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ்கரண் இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர தீர்மானித்து இருக்கிறாராம்.

அதன்படி முருகதாஸும் ஐங்கரன் கருணாவும் சேர்ந்து தமிழ் இயக்கத் தலைவர்களைச் சந்தித்து விளக்கமளித்து வருகின்றனர். சமீபத்தில் பழ நெடுமாறன், திருமாவளவன் மற்றும் சீமானைச் சந்தித்துப் பேசியுள்ளனர். அடுத்து வைகோவைச் சந்திக்கப் போவதாகக் கூறியுள்ளனர். தற்போது ‘கத்தி’ படத்தின் க்ளைமாக்ஸ் சண்டை காட்சிகளை சென்னையில் முழு வீச்சுடன் நடைபெற்று வருகிறது. இதையடுத்து பாடல் காட்சிக்காக வெளிநாடு செல்ல இருக்கிறார்கள். லைகா நிறுவனத்துக்கு இது முதல் தமிழ்ப் படம் கிடையாது. ஏற்கெனவே வேறு பெயரில் கரு பழனியப்பன், சேரன் போன்றவர்களை வைத்து பிரிவோம் சந்திப்போம் என்ற படமெடுத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: