செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் பெட்ரோல் விலை ரூ.1.09 குறைப்பு, டீசல் விலை 50 காசுகள் உயர்வு!…

பெட்ரோல் விலை ரூ.1.09 குறைப்பு, டீசல் விலை 50 காசுகள் உயர்வு!…

பெட்ரோல் விலை ரூ.1.09 குறைப்பு, டீசல் விலை 50 காசுகள் உயர்வு!… post thumbnail image
புதுடெல்லி:-சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோல் விலையை மாற்றியமைக்கவும், டீசல் விற்பனையில் ஏற்படும் இழப்பை சரி செய்யும் வகையில் மாதந்தோறும் 50 காசுகள் உயர்த்திக்கொள்ளவும் எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.அந்த வகையில் பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு ஒரு ரூபாய் 9 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.

டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இந்த விலை உயர்வு அந்தந்த மாநிலங்களின் வரிகளைப் பொறுத்து மாறுபடும்.சென்னையில் ரூ.76.93க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் ஒரு லிட்டர் பெட்ரோல் இன்று நள்ளிரவு முதல் ரூ.1.15 குறைந்து ரூ.75.78க்கு விற்பனை செய்யப்படும். டெல்லியில் லிட்டருக்கு ரூ.1.09 குறைந்து ரூ.72.51-க்கும், மும்பையில் ரூ.1.15 குறைந்து ரூ.80.60-க்கும், கொல்கத்தாவில் லிட்டருக்கு ரூ.1.13 குறைந்து ரூ.80.30-க்கும் விற்பனை செய்யப்படும்.

சென்னையில் ஒரு லிட்டர் டீசல் ரூ.61.70-ல் இருந்து 60 காசுகள் அதிகரித்து நள்ளிரவு முதல் ரூ.62.30-க்கு விற்பனை செய்யப்படும். டெல்லியில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.58.40 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.63.22 ஆகவும், மும்பையில் ரூ.66.63 ஆகவும் இருக்கும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி