செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் ‘கத்தி’ படத்திற்கு தமிழ் அமைப்புகளிடம் ஆதரவு கோரும் ஏ.ஆர்.முருகதாஸ்!…

‘கத்தி’ படத்திற்கு தமிழ் அமைப்புகளிடம் ஆதரவு கோரும் ஏ.ஆர்.முருகதாஸ்!…

‘கத்தி’ படத்திற்கு தமிழ் அமைப்புகளிடம் ஆதரவு கோரும் ஏ.ஆர்.முருகதாஸ்!… post thumbnail image
சென்னை:-முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் கத்தி. விஜய் ஜோடியாக சமந்தா நடிக்கிறார், அனிரூத் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் கடைசிகட்டத்தை எட்டியுள்ளது. கத்தி படத்தை லைகா மொபைல்ஸ் நிறுவனத்தை சேர்ந்த சுபாஸ்கரன் என்பவர் தயாரிக்கிறார். இவர் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உறவினர் என்று கூறப்படுகிறது, இதனால் கத்தி படத்திற்கு சிக்கல் உருவாகியுள்ளது. இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று புதைத்த ராஜபக்சேவின் ஆதரவாளரின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் கத்தி படத்தை தமிழகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என சில தமிழ் அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

இதுதொடர்பாக கடந்த 10நாட்களுக்கு முன்னர் முற்போக்கு மாணவர் முன்னணி, தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பு ஆகிய இயக்கங்களைச் சேர்ந்த சுமார் 50 பேர், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு நேரில் சென்று, அதன் நிர்வாகிகளைச் சந்தித்து, “கத்தி படத்தை வெளியிடக் கூடாது” என எதிர்ப்புத் தெரிவித்து மனு கொடுத்தனர்.இந்நிலையில், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் கத்தி படத்துக்கு எதிர்ப்பு வலுத்து வருவதை உணர்ந்த ஏ.ஆர்.முருகதாஸ், தமிழ்நாட்டிலுள்ள தமிழ் அமைப்பு தலைவர்களைச் சந்தித்து, அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியாகவும், கத்தி படத்திற்கு ஆதரவு கோறும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்.

இதை உறுதிப்படுத்தும் விதமாக நெடுமாறன், திருமாவளவன், சீமான் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார். மேலும் அவர்களை சந்தித்ததை தனது டுவிட்டரிலும் கூறியுள்ளார். நானும், தயாரிப்பாளர் கருணாவும் நெடுமாறன் ஐயா, திருமா அண்ணா, சீமான் அண்ணா ஆகியோரை சந்தித்தோம். கத்தி படம் தொடர்பாக அவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. விரைவில் வைகோவையும் சந்திக்க இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.இதனிடையே கத்தி படம் தொடர்பாக முருகதாஸ் தனது விளக்கத்தை கொடுத்துள்ளார் என்றும், இதுதொடர்பாக இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என தமிழ் அமைப்புகள் தெரிவித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி