ஆகஸ்ட் 18 முதல் ‘இது நம்ம ஆளு’ படப்பிடிப்பு ஆரம்பம்!…

விளம்பரங்கள்

சென்னை:-பாண்டிராஜ் தயாரிப்பு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ படம் தொடங்கப்பட்டபோது, ஒரே ஷெட்யூலில் படத்தை முடிக்கப்போவதாக சொல்லப்பட்டது. ஆனால், சிம்பு நடிக்கும் மற்ற படங்கள் எப்படி எல்லாம் தாமதமாகுமோ அதைப்போலவே இது நம்ம ஆளு படமும் தாமதமானது.

இப்படத்தின் இயக்குநர் கம் தயாரிப்பாளரான பாண்டிராஜ், சிம்பு மற்றும் அவரது டி.ராஜேந்தரை குற்றம் சொன்னார். அதாவது சிம்பு சொன்னபடி கால்ஷீட் கொடுக்காமல் இழுத்தடிக்கிறார் என்றும், அவரது அப்பா டி.ராஜேந்தர் படத்தின் தயாரிப்பு செலவுக்கு பணம் தரவில்லை என்றும் பாண்டிராஜ் தரப்பில் சொல்லப்பட்டது.

இந்நிலையில் இது நம்ம ஆளு படத்தை சீக்கிரமே முடித்து எப்படியாவது தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் படத்தை முடிக்கத் தேவையான பணத்தை தயார் செய்துவிட்டார் டி.ராஜேந்தர். எனவே உற்சாகமான பாண்டிராஜ் மீண்டும் இது நம்ம ஆளு வேலையை கவனிக்க ஆரம்பித்துவிட்டார். ஆகஸ்ட் 18 முதல் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: