செய்திகள் பிளாஸ்டிக் கப்கள் புற்றுநோய் உருவாக்கும் வேதிபொருள்களை கொண்டுள்ளன என ஆய்வில் தகவல்!…

பிளாஸ்டிக் கப்கள் புற்றுநோய் உருவாக்கும் வேதிபொருள்களை கொண்டுள்ளன என ஆய்வில் தகவல்!…

பிளாஸ்டிக் கப்கள் புற்றுநோய் உருவாக்கும் வேதிபொருள்களை கொண்டுள்ளன என ஆய்வில் தகவல்!… post thumbnail image
அமெரிக்கா:-தேநீர், காபி ஆகியவற்றை குடிப்பதற்கு பயன்படும் பிளாஸ்டிக் கோப்பைகளின் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ஸ்டைரீன் என்ற வேதி பொருள் மனிதர்களில் புற்றுநோயை ஏற்படுத்த கூடும் என்று அமெரிக்க அறிவியலாளர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவின் தேசிய ஆய்வு அமைப்பு ஒன்று வேதியியல், நச்சு வேதி பொருள் கண்டறியும் அறிவியல் மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளை சேர்ந்த 10 நிபுணர்களை கொண்டு ஆய்வு ஒன்று நடத்தியது. அதில், வேதி பொருளான ஸ்டைரீன் மனிதர்களிடையே புற்றுநோயை உண்டாக்க கூடிய ஆற்றலை கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளது.

ஆய்வின் தலைவர் டாக்டர் ஜேன் ஹென்னே கூறும்போது, இது துன்பம் விளைவிக்கும் ஒன்று என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டியது அவசியமான ஒன்று என தெரிவித்துள்ளார். அவரது கூற்றின்படி, அறிவியல்பூர்வமான தகவலின் அடிப்படையில், ஸ்டைரீன் புற்றுநோயை உண்டாக்குவதற்கான சான்றுகள் உள்ளன. ஆனால், சில மாற்று விளக்கங்களும் இருக்கின்றன.அவை வாய்ப்பு, ஒரு பக்க சார்பு நிலை மற்றும் சில காரணிகள் ஆகும் என்று ஹென்னே தெரிவித்துள்ளார். எங்களது அறிக்கை இந்த வேதிபொருள் பிரச்சனைக்குரிய ஒன்று என தெரிவிக்கின்றது. ஆனால், அவற்றின் அளவு, பயன்பாடு, ஆபத்திற்கான பண்புகள் ஆகியவற்றை குறித்து ஆய்வு செய்ய வேண்டியது மிக அவசியமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உணவுகளை பாதுகாப்பாக விற்பதற்காக அடைத்து வைக்கப்படும் நிலையில் பயன்படும் வேதிபொருள்களில் ஸ்டைரீன் உட்பட 170 அபாயகரமான வேதிபொருள்கள் சட்டபூர்வமான பயன்பாட்டில் உள்ளன என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். உணவுகளை டின்கள் அல்லது பெட்டிகளில் வைப்பதற்காக பயன்படும் வேதிபொருள்களில் நச்சு உருவாக்க கூடிய பொருட்களும் காணப்படுகின்றன.அவை புற்றுநோயை உருவாக்க கூடும் என்றும், மரபணுக்களில் மாற்றத்தை தோற்றுவிக்க கூடியது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஹென்னே தலைமையிலான ஆய்வின்படி, பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய 175 வேதிபொருள்களை கண்டறிந்துள்ளனர். இந்த பொருட்கள் ஆணின் விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுத்துதல், உறுப்புகள் பாதிப்புடன் உருவாதல் மற்றும் உடலில் ஹார்மோன் உற்பத்தியில் பாதிப்பு ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன என கண்டறிந்துள்ளனர்.

எனினும், உணவு தர கழகம் ஆனது, ஐரோப்பிய தரத்தின் கீழ் உணவு பேக்கிங் செய்யப்படுவதால் அதில் இருக்கும் வேதிபொருட்கள் ஒழுங்குகள் மற்றும் விதிமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் பயன்படுத்தப்படும்பொழுது அவற்றை குறித்து கருத்தில் கொள்ள வேண்டியதில்லை என்று விளக்கம் தருவதுடன் அவற்றை நுகர்வோர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
அமெரிக்க வேதியியல் அமைப்பு ஸ்டைரீன் வேதிபொருள் குறித்து சாதகமாக கூறுகையில், உணவு பொருட்கள் உற்பத்தியில் குறிப்பாக, காபி கோப்பைகள், சாலட் அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் டின்கள் ஆகியவற்றில் 50 வருடங்களுக்கும் மேலாக பாலிஸ்டைரீன் பிளாஸ்டிக் பயன்பாட்டில் உள்ளது. இந்த வேதிபொருள், ஒழுங்குமுறை அமைப்பால் மறு ஆய்வு செய்யப்பட்டு, உணவு தொடர்பான பயன்பாட்டில் பாதுகாப்பானது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது என அந்த அமைப்பானது தெரிவித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி