செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு சர்வதேச போட்டிகளில் இருந்து தென்ஆப்பிரிக்க வீரர் காலிஸ் ஓய்வு அறிவிப்பு!…

சர்வதேச போட்டிகளில் இருந்து தென்ஆப்பிரிக்க வீரர் காலிஸ் ஓய்வு அறிவிப்பு!…

சர்வதேச போட்டிகளில் இருந்து தென்ஆப்பிரிக்க வீரர் காலிஸ் ஓய்வு அறிவிப்பு!… post thumbnail image
ஜோகன்னஸ்பர்க்:-தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்ரவுண்டராக இருந்தவர் ஜேக்யூஸ் காலிஸ். கடந்த வருடம் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற இவர் ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வந்தார்.

சமீபத்தில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவர் சரியாக விளையாடவில்லை. இதனால் இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதாக அறிவித்துள்ளார்.தான் ஓய்வு பெறுவதற்கு இதுதான் சரியான நேரம் என்று காலிஸ் நினைத்திருக்கலாம் என்று கிரிக்கெட் வட்டாரங்களில் தெரிவித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி