செய்திகள்,திரையுலகம் கார்த்தியின் உடல்நிலை பற்றி சூர்யா சொன்ன சுவாரஸ்யமான தகவல்!…

கார்த்தியின் உடல்நிலை பற்றி சூர்யா சொன்ன சுவாரஸ்யமான தகவல்!…

கார்த்தியின் உடல்நிலை பற்றி சூர்யா சொன்ன சுவாரஸ்யமான தகவல்!… post thumbnail image
சென்னை:-நடிகர் சிவக்குமாரின் இளைய மகனும், நடிகர் சூர்யாவின் தம்பியுமான கார்த்தி, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். தற்போது மெட்ராஸ் படத்தில் நடித்து முடித்துள்ள கார்த்தி, அடுத்தப்படியாக கொம்பன் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கார்த்தி, திடீரென தனது வீட்டில் மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவர் உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது நலமாக உள்ளார்.

இந்நிலையில், அஞ்சான் தொடர்பான விளையாட்டு ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் பங்கேற்ற சூர்யாவிடம், கார்த்தியின் உடல்நிலை குறித்து கேட்டபோது, கார்த்தியின் உடம்பில் நீர்சத்து குறைந்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டது. தற்போது அவர் நலமாக இருக்கிறார். உடல்நிலை தேறியவுடன் வழக்கம் போல் அவரது பாணியில் நர்ஸ்கள், டாக்டர்கள் என்று எல்லோரையும் கலாய்த்து கொண்டு இருக்கிறார். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் அவர் தங்கியிருந்த அறை எண் 420, அதனால் தான் தன்னை இந்த அறையில் அனுமதித்து உள்ளனர் என்று நக்கல் செய்து கொண்டு இருந்தார்.இவ்வாறு சூர்யா கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி