செய்திகள்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு காமன்வெல்த் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவுக்கு ஒரே நாளில் 3 தங்கம்!…

காமன்வெல்த் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவுக்கு ஒரே நாளில் 3 தங்கம்!…

காமன்வெல்த் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவுக்கு ஒரே நாளில் 3 தங்கம்!… post thumbnail image
கிளாஸ்கோ:-ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 20வது காமன்வெல்த் விளையாட்டு நடக்கிறது. 6வது நாளான நேற்று மல்யுத்த போட்டிகள் துவங்கின.இதில் ‘பிரீஸ்டைல்’ ஆண்கள் 74 கி.கி., எடைப்பிரிவில் நட்சத்திர வீரர் சுஷில் குமார், பாகிஸ்தானின் அபாசை சந்தித்தார். தலா 3 நிமிடங்கள் கொண்ட இரு பிரிவுகளாக போட்டி நடந்தது. முதல் பாதியில் 8–0 என, முன்னிலையில் இருந்த சுஷில் குமார், அபாசை அப்படியே முதுகு கீழே விழும்படி கவிழ்த்த, உடனடியாக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, சுஷில் குமார் தங்கம் கைப்பற்றி அசத்தினார்.

57 கி.கி., எடைப்பிரிவில் இந்தியாவின் அமித் குமார், பைனலில் நைஜீரியாவின் வெல்சனை எதிர்கொண்டார். முதல் பாதியில் 4–0 என, முன்னிலை பெற்றார் அமித்குமார். அடுத்த பாதியில் இருவரும் 2–2 என, சமமான புள்ளிகள் பெற்றனர். முடிவில், 6–2 என்ற கணக்கில் வென்ற அமித் குமார், தங்கம் வென்றார். காமன்வெல்த் விளையாட்டில் இவர் வென்ற முதல் தங்கம் இது தான்.

பெண்கள் 48 கி.கி., பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத், பைனலில் இங்கிலாந்தின் ராட்டிகனை சந்தித்தார். முதல் பாதியில் 6–4 என, முன்னிலை பெற்ற போகத், அடுத்த பாதியிலும் 5–4 என, முந்தினார். முடிவில், 11–8 என்ற கணக்கில் வெற்றி பெற்ற போகத்துக்கு, தங்கம் கிடைத்தது.ஆண்கள் 125 கி.கி., பிரிவு பைனலில், இந்தியாவின் ராஜீவ் தோமர், 0–3 என்ற கணக்கில் வீழ்ந்து, வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார்.
காமன்வெல்த் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு நேற்று மட்டும் மூன்று தங்கப்பதக்கங்கள் கிடைத்தன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி