செய்திகள்,திரையுலகம் இயக்குனர் ஷங்கரின் பெயருக்குக் காரணம் நடிகர் சிவாஜிகணேசன்!…

இயக்குனர் ஷங்கரின் பெயருக்குக் காரணம் நடிகர் சிவாஜிகணேசன்!…

இயக்குனர் ஷங்கரின் பெயருக்குக் காரணம் நடிகர் சிவாஜிகணேசன்!… post thumbnail image
சென்னை:-திரையுலகில் பெயர் என்பது மிகவும் முக்கியம், பெற்றோர் வைத்த நிஜப் பெயரை மாற்றி சினிமாவுக்காக வேறு பெயரை வைத்துக் கொண்ட நடிகர்களும், நடிகைகளும், இயக்குனர்களும் அதிகம். அதில் ஜோசியம், ராசி வேறு கலந்திருக்கும். இவர்களில் இயக்குனராக அறிமுகமான போதே தன்னுடைய பெயராலும் திரையுலகினரை திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் ஷங்கர். பொதுவாக சங்கர் என்றுதான் எழுதுவார்கள், ஆனால் இவரோ பெயரிலும் ஷங்கர் என போட ஆரம்பித்தார். தனக்கு இந்தப் பெயரை அம்மா எதற்காக வைத்தார்கள் என சமீபத்திய விழா ஒன்றில் ஷங்கரே தெரிவித்தார்.

எனக்கும் ‘செவாலியே சிவாஜிகணேசன்‘ அவர்களுக்கும் ஒரு தொடர்பு உண்டு. எனது அம்மா தீவிரமான திரைப்பட ரசிகை. அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போது சிவாஜிகணேசன் அவர்கள் நடித்த படம் ஒன்றைப் பார்க்கச் சென்றிருக்கிறார். அன்று இரவே அவருக்கு பிரசவ வலி எடுத்து நான் பிறந்திருக்கிறேன். நான் பிறந்த பின் அவர் எனக்கு ஷங்கர் என பெயர் வைத்தார். நான் பிறந்த அன்று என் அம்மா பார்த்த படத்தில் சிவாஜி அவர்களின் கதாபாத்திரத்தின் பெயர் சங்கர். அதையே எனது பெயராக அம்மா வைத்து விட்டார்கள்.

எனக்கும் சிவாஜி அவர்களை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ‘காதலன்’ படத்தில் பிரபுதேவாவின் அப்பாவாக அவரைத்தான் முதலில் நடிக்க வைக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால், ஒரு நடிப்புச் சிங்கத்துக்கு தீனி போடும் அளவிற்கு அந்த கதாபாத்திரம் இருக்குமா என்ற சந்தேகம் வந்தது. அதனால் அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிட்டேன். அவரை இயக்க முடியவில்லையே என்ற குறை இருந்தாலும் ரஜினி அவர்கள் நடித்த படத்திற்கு ‘சிவாஜி’ என பெயர் வைத்து என் ஆசையை தீர்த்துக் கொண்டேன், என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி