செய்திகள்,திரையுலகம் நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி மீண்டும் கர்ப்பம்!…

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி மீண்டும் கர்ப்பம்!…

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி மீண்டும் கர்ப்பம்!… post thumbnail image
சென்னை:-அஜீத்குமார்ஷாலினி இருவரும் ‘அமர்க்களம்’ என்ற படத்தில் முதன்முதலாக ஜோடி சேர்ந்து நடித்தார்கள். அப்போது இரண்டு பேருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.திருமணத்துக்குப்பின், ஷாலினி நடிக்கவில்லை. இருவரும் சென்னை திருவான்மியூரில் சொந்த வீடு கட்டி குடியேறினார்கள்.

அஜீத்–ஷாலினி தம்பதிக்கு கடந்த 2008–ம் ஆண்டில், பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு, ‘அனோஷ்கா’ என்று பெயர் சூட்டினார்கள். அனோஷ்காவுக்கு இப்போது 6 வயது ஆகிறது.6 வருடங்களுக்குப்பின், ஷாலினி மீண்டும் கர்ப்பமாகி இருக்கிறார். இப்போது அவர் 3 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். அவ்வப்போது அவர் டாக்டரிடம் சென்று மருத்துவ பரிசோதனை செய்து கொள்கிறார். தன்னுடன் விளையாடுவதற்கு ஒரு ‘குட்டி பாப்பா’ வரப்போவதை அறிந்து அனோஷ்கா மகிழ்ச்சியுடன் காணப்படுகிறாள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி