அந்தமானில் ரிக்டர் 5.5 அளவுகோலில் நிலநடுக்கம்!…

விளம்பரங்கள்

புதுடெல்லி:-வடக்கு அந்தமான் தீவில் இன்று மதியம் 5.5 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.இந்த நிலநடுக்கம் இன்று மதியம் 12.37 மணி அளவில் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் 35 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக இந்திய வானிலை மைய பொதுஇயக்குனர் ரதோர் தெரிவித்தார்.

இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை. இந்திய பெருங்கடல் மற்றும் அந்தமான கடற்பகுதி பூகம்பம் பாதிக்கப்படும் பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: