செய்திகள்,திரையுலகம் பெங்களூர் டேய்ஸ் ரீமேக்கில் இணையும் ஆர்யா, சித்தார்த், நாக சைதன்யா!…

பெங்களூர் டேய்ஸ் ரீமேக்கில் இணையும் ஆர்யா, சித்தார்த், நாக சைதன்யா!…

பெங்களூர் டேய்ஸ் ரீமேக்கில் இணையும் ஆர்யா, சித்தார்த், நாக சைதன்யா!… post thumbnail image
சென்னை:-மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி ஹிட்டான படம் பெங்களூர் டேஸ். அஞ்சலி மேனன் என்ற பெண் இயக்குனரின் படம். பகத் பாசில், நஸ்ரியா, துல்கர் சல்மான் நடித்திருந்தனர். இந்தப் படத்தை இந்திய மொழிகளில் ரீமேக் செய்ய பிவிபி சினிமா உரிமம் பெற்றுள்ளது. தற்போது தமிழ், தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் படத்தை தயாரிக்க முடிவு செய்திருக்கிறது.

இதனை பிரபல தெலுங்கு இயக்குனர் பொம்மரிலு பாஸ்கர் இயக்குவார் என்று தெரிகிறது. தமிழில் ஆர்யாவும், தெலுங்கில் நாக சைதன்யாவும் நடிக்கிறார்கள், இரண்டு மொழிக்கும் அறிமுகமான சித்தார்த், பகத் பாசில் கேரக்டரிலும், சமந்தா, நஸ்ரியா கேரக்டரிலும் நடிக்கிறார்கள் என்ற தகவல் வெளிவந்துள்ளது. அடுத்த மாதம் படப்பிடிப்புகள் தொடங்குகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி