செய்திகள்,திரையுலகம் தமிழில் வெளியாகும் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்கள் நடித்த எக்ஸ்பெண்டபிள்ஸ் 3 திரைப்படம்!…

தமிழில் வெளியாகும் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்கள் நடித்த எக்ஸ்பெண்டபிள்ஸ் 3 திரைப்படம்!…

தமிழில் வெளியாகும் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்கள் நடித்த எக்ஸ்பெண்டபிள்ஸ் 3 திரைப்படம்!… post thumbnail image
தி எக்ஸ்பெண்டபிள்ஸ் பட தொடர்ச்சியாக அதன் மூன்றாம் பாகம் பிரபல ஆக்ஷன் ஹீரோக்களின் நடிப்பில் உருவாகியுள்ளது. சில்வெஸ்டர் ஸ்டாலோன், அர்னால்டு ஸ்வாஸ்நேகர், மெல் கிப்சன், ஜேசன் ஸ்டேதம், ஜெட் லீ, ஆண்டானியா உட்பட பலர் நடித்த இப்படத்தை பாட்ரிக் ஹக்ஸ் இயக்கியுள்ளார். ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்படுகிறது.

படம் குறித்து ஸ்டாலோன் கூறும்போது, ஆக்ஷன் பிரியர்களுக்கு பிரமாண்டமான பட மாக இருக்கும். ஆரம்ப நாட்களில் நானும், அர்னால்டும் போட்டியாளர்களாக ஒருவரை ஒருவர் நினைத்தோம். பகைவர்கள் போல் நடந்தோம். இப்போது நட்புடன் பழக ஆரம்பித்து, படங்களில் இணைந்து பணியாற்றத் தொடங்கி விட்டோம். என் திரையுலக வளர்ச்சிக்கு தெரிந்தோ, தெரியாமலோ அர்னால்டும் ஒரு முக்கிய காரணம் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி