சிம்பு, அஜீத்தைத் தொடர்ந்து விக்ரமுடன் இணையும் கெளதம்மேனன்!…

விளம்பரங்கள்

சென்னை:-விஜய், சூர்யா ஆகியோரால் கழட்டி விடப்பட்ட கெளதம்மேனனுக்கு தக்க சமயத்தில் கைகொடுத்தவர் சிம்பு. தனக்கு விண்ணைத்தாண்டி வருவாயா என்றொரு மெகா ஹிட் படத்தை கொடுத்தவர் என்பதால் அவரது சட்டென்று மாறுது வானிலை படத்திற்கு கால்சீட் கொடுத்து நடித்தார். அந்த நேரம் பார்த்து, அஜீத்தும் கால்சீட் கொடுக்க முன்வந்ததால், அவரை விட முடியாது என்பதால், சிம்புவின் ஒப்புதலோடு அவர் படத்தை தற்போது இயக்கிக்கொண்டிருக்கிறார்.

ஆக, அஜீத்தின் 55-வது படத்தை முடித்ததும், மீண்டும் சிம்பு நடிக்கும் சட்டென்று மாறுது வானிலை படத்தை தொடர்கிறார் கெளதம்மேனன். இந்த நேரத்தில், தற்போது ஷங்கரின் ஐ படத்தில் நடித்து விட்டு விஜய் மில்டனின் பத்து எண்றதுக்குள்ள படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் விக்ரமும் அந்த படத்தை முடித்ததும் கெளதம்மேனன் இயக்கத்தில் நடிக்க ஒப்புதல் அளித்துள்ளாராம்.சிம்பு, அஜீத்தைத் தொடர்ந்து இப்போது விக்ரமும் தனக்கு ஆதரவு கொடுத்திருப்பதால் மீண்டும் ஒரு மெகா ஆக்சன் படத்தை இயக்குகிறாராம் கெளதம்மேனன்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: