செய்திகள்,தொழில்நுட்பம் மைக்ரோ சாப்ட் நிறுவனத்துக்குரிய கம்ப்யூட்டர் ரகசியங்கள் திருட்டிய சென்னை வாலிபர் கைது!…

மைக்ரோ சாப்ட் நிறுவனத்துக்குரிய கம்ப்யூட்டர் ரகசியங்கள் திருட்டிய சென்னை வாலிபர் கைது!…

மைக்ரோ சாப்ட் நிறுவனத்துக்குரிய கம்ப்யூட்டர் ரகசியங்கள் திருட்டிய சென்னை வாலிபர் கைது!… post thumbnail image
புதுடெல்லி:-சென்னையை சேர்ந்தவர் டி.பிரபு. இவர் பள்ளிப்படிப்பை இடையிலேயே நிறுத்தி விட்டு தன்னை எம்.பி.ஏ. பட்டதாரி என்று சொல்லிக் கொள்கிறவர் ஆவார்.பிரசித்தி பெற்ற மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் மென்பொருள் பயன்படுத்தக்கூடிய அரசு இணைய தளங்களுக்குள் புகுந்து, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மைக்ரோசாப்ட் தயாரிப்புகளின் ‘புராடக்ட் கீ’ என்று சொல்லப்படக்கூடிய ‘கோடு’ ரகசியங்களை திருடி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அப்படி அரசு இணைய தளங்களுக்குள் புகுந்தபோது, அவற்றிலும் அவர் குறும்புத்தனமாக குளறுபடி செய்து, இயங்க விடாமல் செய்துள்ளார். இது தொடர்பான புகாரின்பேரில் பிரபுவை சி.பி.ஐ. சைபர் பிரிவினர் கைது செய்தனர். அவரது வங்கிக்கணக்கில் ரூ.18 லட்சம் சேமிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது.பிரபு மீது இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 379 (திருட்டு) மற்றும் 2000-ம் ஆண்டு இயற்றப்பட்ட தகவல் தொழில் நுட்பச்சட்ட பிரிவுப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரபுவுக்கு சொந்தமான கட்டிடங்களில் சி.பி.ஐ.யினர் அதிரடி சோதனைகள் நடத்தி கம்ப்யூட்டர் ஹார்டுவேர் டிஸ்க்குகளை கைப்பற்றினர்.கைது செய்யப்பட்ட பிரபு, சென்னை எழும்பூர் கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரை டெல்லிக்கு கொண்டு சென்று விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி வழங்கியது.இந்த தகவல்களை டெல்லியில் சி.பி.ஐ. செய்தி தொடர்பாளர் காஞ்சன் பிரசாத் வெளியிட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி