செய்திகள்,திரையுலகம் இயக்குனர்கள் ராஜமௌலி, ராம்கோபால் வர்மா மோதல்!…

இயக்குனர்கள் ராஜமௌலி, ராம்கோபால் வர்மா மோதல்!…

இயக்குனர்கள் ராஜமௌலி, ராம்கோபால் வர்மா மோதல்!… post thumbnail image
சென்னை:-சமீபத்தில் ராம் கோபால் வர்மா இயக்கி வெளிவந்த தெலுங்குப் படமான ‘ஐஸ் க்ரீம்’ படத்தைப் பற்றி பிரபல இயக்குனரான ‘நான் ஈ’ ராஜமௌலி ஒரு கருத்தை டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார். “ஐஸ் க்ரீம்’ படம் தயாரிப்பு வடிவமைப்புக்கு சிறந்த உதாரணமான படம், ஆனால் உள்ளடக்கத்திற்கு சிறந்த உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம், என்று கூறியிருந்தார்.

ராஜமௌலியின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சில தினங்கள் கழித்து ராம்கோபால் வர்மா அவரது கருத்தைப் பதிவு செய்திருந்தார். ராஜமௌலி, மிகப் பிரம்மாண்மான படங்களைத் தயாரித்து, சிறந்த வெற்றிப் பட இயக்குனர் என பெயரெடுத்தவர். ஆனால், பட்ஜெட் படங்களைத் தயாரித்து திரையுலகத்துக்கு நல்லது செய்ய, அவர் ரொம்ப நாளாக கற்றுக் கொண்டு வருகிறார் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்,” என பதிலடி கொடுத்திருக்கிறார்.

இவர்கள் இரண்டு பேருமே சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பல விஷயங்களைப் பதிவு செய்து எதையாவது சொல்லி வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அவர்களது கருத்துக்களால் மோதிக் கொள்ள ஆரம்பித்துள்ளார்கள். இந்த மோதலை தெலுங்குத் திரையுலகமும், ரசிகர்களும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி