செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் விஷாலுக்கு தம்பியாக நடிக்கும் பிரபல காமெடி நடிகர்…!

விஷாலுக்கு தம்பியாக நடிக்கும் பிரபல காமெடி நடிகர்…!

விஷாலுக்கு தம்பியாக நடிக்கும் பிரபல காமெடி நடிகர்…! post thumbnail image
தற்போது ஹரி இயக்கும் ‘பூஜை’ படத்தில் நடித்துவருகிறார் விஷால். இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ‘பூஜை’ படத்திற்குப் பிறகு சுந்தர்.சி இயக்கும் ‘ஆம்பள’ படத்தில் நடிக்கிறார் விஷால். இப்படத்தில் ஹன்சிகா ஹீரோயினாக நடிக்கிறார்.

‘மெரினா’, ‘எதிர்நீச்சல்’, ‘மான்கராத்தே’ போன்ற படங்களில் காமெடி வேடங்களில் நடித்தவர் சதீஷ். தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘கத்தி’ படத்தில் நடித்துவருகிறார்.

விஷால் சுந்தர்.சி இணையும் ‘ஆம்பள’ படத்தில் விஷாலின் தம்பியாக சதீஷ் நடிக்கிறார். ‘பூஜை’ படம் முடிந்த பின் ‘ஆம்பள’ படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி