செய்திகள்,திரையுலகம் முன்னாள் ‘சூப்பர் ஸ்டார்’ ராஜேஷ்கண்ணாவின் வீடு ரூ.90 கோடிக்கு விற்பனை!…

முன்னாள் ‘சூப்பர் ஸ்டார்’ ராஜேஷ்கண்ணாவின் வீடு ரூ.90 கோடிக்கு விற்பனை!…

முன்னாள் ‘சூப்பர் ஸ்டார்’ ராஜேஷ்கண்ணாவின் வீடு ரூ.90 கோடிக்கு விற்பனை!… post thumbnail image
மும்பை:-இந்தி பட உலகின் முதல் சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கண்ணா ஆவார். 1960, 1970 மற்றும் 80-களில் ஏராளமான படங்களில் நாயகனாக நடித்து முன்னணி நடிகராக இருந்தார். 180-க்கும் மேற்பட்ட படங்கள் நடித்துள்ளார். 1973-ல் இந்தி நடிகை டிம்பிள் கபாடியாவை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு டுவிங்கிள் கண்ணா, ரிங்கி கண்ணா என இரு மகள்கள் உள்ளனர். இந்தி திரையுலகில் முதன் முதல் அதிக சம்பளம் வாங்கிய நடிகர் ராஜேஷ் கண்ணா வயதானதும் சினிமாவை விட்டு ஒதுங்கினார். கடந்த 2012-ல் தனது 69-வது வயதில் மரணம் அடைந்தார்.ராஜேஷ் கண்ணாவுக்கு மும்பை கார்ட்டர் ரோட்டில் 603 சதுர மீட்டர் பரப்பளவில் பிரமாண்ட பங்களா வீடு உள்ளது.

கடற்கரை அருகில் இது அமைந்துள்ளது. இந்த வீட்டை விற்பனை செய்ய இரு மகள்களும் முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டனர்.இதை வாங்க மும்பையில் உள்ள பெரும் கோடீஸ்வரர்கள் மோதினர். இறுதியில் தொழில் அதிபர் ஷாஜி கிரன் ஷெட்டி ரூ.90 கோடி கொடுத்து ராஜேஷ் கண்ணா பங்களாவை வாங்கினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி