செய்திகள்,திரையுலகம் ஹீரோவை வில்லனாக்கிய இசையமைப்பாளர் அனிருத்!…

ஹீரோவை வில்லனாக்கிய இசையமைப்பாளர் அனிருத்!…

ஹீரோவை வில்லனாக்கிய இசையமைப்பாளர் அனிருத்!… post thumbnail image
சென்னை:-தனுஷ், அமலாபால் நடிப்பில் சமீபத்தில் வெளியான வேலையில்லா பட்டதாரியில் வில்லனாக அறிமுகமாகியிருக்கிறார் அமிதாஷ். ஹீரோவாக நடிக்கும் கனவில் இருந்த அமிதாஷை வில்லனாக மாற்றியவர் அனிருத்.இதுபற்றி அமிதாஷ் கூறியதாவது: பூர்வீகம் கர்நாடகம். பிறந்து, வளர்ந்தது சென்னையில். அப்பா பிசினஸ் மேன்.

நானும் அனிருத்தும் சைல்ட்வுட் பிரண்ட்ஸ். ஒரே ஸ்கூல், காலேஜ்ல படிச்சோம் சேர்ந்தே ஊர் சுற்றுவோம். அனிருத்தோட தங்கை கல்யாணத்துல அத்தனை வேலையையும் நான்தான் இழுத்து போட்டு செஞ்சேன். அதை கவனிச்ச தனுஷூக்கு என்னை பிடிச்சிருந்தது. அனிருத்தும் இவன் நடிக்க ஆசைப்படுறான் உங்க தயாரிப்புல ஒரு சான்ஸ் கொடுங்கன்னு ரெக்கமண்ட் பன்னினார். தனுஷ் உடனே நான் நடிக்கிற ஒரு படத்துல ஹாண்ட்சமான வில்லன் கேரக்டர் இருக்கு பண்றீங்களானு கேட்டார்.

தனுஷ் படத்துல சின்ன கேரக்டர்னாகூட நடிக்கலாமே டக்குன்னு ஓகே சொல்லிட்டேன். வேலையில்லா பட்டதாரி சான்ஸ் கிடைச்சது இப்படித்தான். இப்போ தியேட்டர்ல எல்லோரும் என்னை திட்டினாலும் பின்னாடி நான் ஹீரோவா நடிக்கும்போது பாராட்டுவாங்கன்னு நம்புறேன். காலேஜ்ல நடிக்கிறப்போ ஆங்கில நாடகங்கள்ல நடிச்சிருக்கேன். அனுபம் கேரின் நடிப்பு ஸ்கூல்ல படிச்சிருக்கேன். டான்ஸ், பைட் கத்துக்கிட்டிருக்கேன். முழுமையான ஹீரோவா நிச்சயம் வருவேன். என்கிறார் அமிதாஷ்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி