செய்திகள்,திரையுலகம் விருதுக்கு அனுப்பிய புகைப்படத்தை திருடி பேஸ்புக்கில் பயன்படுத்தியதாக ஹாலிவுட் நடிகர் மீது குற்றச்சாட்டு!…

விருதுக்கு அனுப்பிய புகைப்படத்தை திருடி பேஸ்புக்கில் பயன்படுத்தியதாக ஹாலிவுட் நடிகர் மீது குற்றச்சாட்டு!…

விருதுக்கு அனுப்பிய புகைப்படத்தை திருடி பேஸ்புக்கில் பயன்படுத்தியதாக ஹாலிவுட் நடிகர் மீது குற்றச்சாட்டு!… post thumbnail image
ஹாலிவுட்:-வனவிலங்குகளின் வித்தியாசமான மற்றும் ஆச்சரியப்பட வைக்கும் வகையிலான அரிய புகைப்படங்கள் கொண்ட தொகுப்பில் இருந்து ஒவ்வொரு வருடமும் ஒரு படம் தேர்வு செய்யப்பட்டு அதனை எடுத்த புகைப்படக்காரருக்கு அந்த ஆண்டின் சிறந்த வனவாழ்வு புகைப்படக்காரர் விருது வழங்கி கவுரவிக்கப்படும். இதற்கான போட்டியில், மார்ஷல் வான் ஓஸ்டன் என்பவரும் இருக்கிறார்.

அருகில் நின்று கொண்டிருந்த சுற்றுலா பயணி ஒருவரிடம் இருந்து மெகாக் வகையை சேர்ந்த குரங்கு ஒன்று மொபைல் போனை பறித்து வைத்து கொண்டது. அதன் பின்பு நீருக்குள் இறங்கி கொண்டு மனிதர்கள் பார்ப்பது போன்று போனை வைத்து பார்த்து கொண்டு இருந்தது. இந்த காட்சியை மார்ஷல் புகைப்படமாக எடுத்து போட்டிக்கு அனுப்பியுள்ளார். இந்த போட்டியில், 100 நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டுள்ளனர். 50வது வருடமாக நடைபெறும் இந்த போட்டியில் இவ்வருடம் 41 ஆயிரம் பேர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த வருடத்தின் வனவாழ்வு புகைப்படக்காரர் விருதுக்கு 50 படங்கள் தேர்வாகியுள்ளன. அதில் மார்ஷல் எடுத்த புகைப்படமும் ஒன்று. சிறந்த படத்தை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு தொடங்கியுள்ளது. வாக்கெடுப்பு வருகிற செப்டம்பர் 5ம் தேதி முடிவடைகிறது. வெற்றியாளரின் பெயர் அக்டோபரில் அறிவிக்கப்படும்.இந்நிலையில்தான் தனது புகைப்படத்தை ஆஷ்டன் குச்சர் தனது பேஸ்புக்கில் பயன்படுத்தி கொண்டதாக மார்ஷல் குற்றச்சாட்டு கூறியுள்ளார். எனினும், மார்ஷலின் குற்றச்சாட்டை தொடர்ந்து குச்சர் அந்த புகைப்படத்தை நீக்கி விட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி