செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் புறப்பட்ட 50 நிமிடத்தில் அல்ஜீரிய விமானம் மாயமானதால் பரபரப்பு!…

புறப்பட்ட 50 நிமிடத்தில் அல்ஜீரிய விமானம் மாயமானதால் பரபரப்பு!…

புறப்பட்ட 50 நிமிடத்தில் அல்ஜீரிய விமானம் மாயமானதால் பரபரப்பு!… post thumbnail image
அல்ஜீரியா:-இன்று அதிகாலை அஜீரிய விமானம் Airbus A320, Burkina Faso என்ற நகரத்தில் இருந்து Algiers என்ற நகரத்திற்கு செல்வதற்காக கிளம்பியது. கிளம்பிய 50 நிமிடங்களில் அந்த விமானம் ராடாரின் பார்வையில் இருந்து திடீரென மறைந்தது. இதனால் அல்ஜீரிய விமான நிலைய அதிகாரிகள் பெரும் பதட்டம் அடைந்துள்ளனர். அல்ஜீரியாவில் உள்ள Malian என்ற வான் எல்லைப்பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டதாகவும், விமானத்தின் நிலை என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மாயமான Airbus A320 என்ற அல்ஜீரிய விமானத்தில் 110 பயணிகளும் விமான ஊழியர்களும் இருந்தனர். அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. ஒரே வாரத்தில் அடுத்தடுத்து இரண்டு விமானங்கள் விபத்துக்குள்ளாகியிருப்பதும், மூன்றாவது விமானம் மாயமாகி இருப்பதும் கண்டு உலகெங்கிலும் உள்ள விமான பயணிகள் அச்சம் கொண்டுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி