அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு சீன மொழியில் வெளியீடு!…

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு சீன மொழியில் வெளியீடு!…

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு சீன மொழியில் வெளியீடு!… post thumbnail image
புதுடெல்லி:-பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு அடங்கிய நூல் ஒன்றை, பா.ஜனதா எம்.பி.யும், பத்திரிகையாளருமான தருண் விஜய் சீன மொழியில் எழுதியுள்ளார். ‘மோடி-ஒரு நட்சத்திரத்தின் நம்பமுடியாத தோற்றம்’ என்ற பெயரில் எழுதப்பட்டுள்ள இந்த நூலை, சீனாவின் சிச்சுவான் பல்கலைக்கழகத்தின் தெற்கு ஆசிய கல்வி மையம் வெளியிட்டுள்ளது.

இந்த நூலுக்காக மோடி எழுதியுள்ள உரையில், ‘இந்தியாவில் தற்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை சீன நண்பர்கள் அறிந்து கொள்ள இந்த நூல் உதவும்’ என நம்புவதாக கூறியுள்ளார். மேலும் இந்த நூல், சமகால இந்தியாவின் வாசலாகவும், புரிந்துணர்வு மற்றும் தோழமைக்கு திறவுகோலாகவும் அமையும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த புத்தகத்தை நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடியிடம், நூலாசிரியர் தருண் விஜய் வழங்கினார். அப்போது மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி மற்றும் வெங்கையா நாயுடு ஆகியோர் உடனிருந்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி