செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு உலக பணக்கார விளையாட்டு வீரர்கள் வரிசையில் டோனிக்கு 5ம் இடம்!…

உலக பணக்கார விளையாட்டு வீரர்கள் வரிசையில் டோனிக்கு 5ம் இடம்!…

உலக பணக்கார விளையாட்டு வீரர்கள் வரிசையில் டோனிக்கு 5ம் இடம்!… post thumbnail image
புதுடெல்லி:-உலகின் பணக்கார விளையாட்டு வீரர்களை போர்பஸ் பத்திரிகை ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது. வீரர்கள் போட்டி மூலம் பெறும் பணம், விளம்பரம் மூலம் கிடைக்கும் வருமானம் ஆகியவற்றை வைத்து இந்த பட்டியலை வெளியிடுகிறது.

2013–ம் ஆண்டில் அதிக பணம் சம்பாதித்து உள்ள விளையாட்டு வீரர்களில் உலக அளவில் இந்திய அணி கேப்டன் டோனி 5–வது இடத்தை பிடித்துள்ளார். அவர் ரூ.126 கோடி சம்பாதித்துள்ளார்.
கால்பந்து பிரபலங்களான ரொனால்டோ, லியானல் மெஸ்சியை விட கடந்த ஆண்டில் டோனி அதிக பணம் சம்பாதித்து உள்ளார்.17 கிராண்ட்சிலாம் பட்டங்களை வென்ற டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் ஆகியோர் தலா ரூ.276 கோடி சம்பாதித்து முதல் இடத்தில் உள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி