செய்திகள்,திரையுலகம் ஆகஸ்டு 21ம் தேதி நடிகை நஸ்ரியா திருமணம்!…

ஆகஸ்டு 21ம் தேதி நடிகை நஸ்ரியா திருமணம்!…

ஆகஸ்டு 21ம் தேதி நடிகை நஸ்ரியா திருமணம்!… post thumbnail image
சென்னை:-நேரம் படத்தில் நடித்த நடிகை நஸ்ரியா நசீம், மலையாள நடிகரான பகத் பாசிலை வருகிற ஆகஸ்டு 21ம் தேதி திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். வருட தொடக்கத்தில் தனது திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் அவரது திருமண அறிவிப்பால் தொடர்ந்து நடிப்பாரா? என்ற கேள்வி குறியுடன் ரசிகர்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர்.

19 வயதேயான நஸ்ரியா, பகத் உடன் திருமணம் என்ற முடிவை அறிவித்துள்ளதால் அடுத்தடுத்து பட வாய்ப்புகளை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மைனா பட நாயகி அமலா பால் அவரது திருமணத்திற்கு பின் திரை உலகில் இருந்து மெதுவாக ஓரம் கட்டப்பட்டு விட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

அதனால், தனது திரை வாழ்க்கையை பாதிக்கும் வகையில் தவறான நேரத்தில் திருமண முடிவை எடுத்து விட்டாரோ என்று பலரும் கருதுகின்றனர். வளர்ந்து வரும் நடிகையான நஸ்ரியா சினிமாவில் தொடர்ந்து நடிப்பாரா? அல்லது தனது பணிக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுவாரா என்பது பின்பு தான் தெரியும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி