செய்திகள்,திரையுலகம்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் அக்டோபர் 2இல் ரிலீசாகும் உலகநாயகனின் திரைப்படம்…!

அக்டோபர் 2இல் ரிலீசாகும் உலகநாயகனின் திரைப்படம்…!

அக்டோபர் 2இல் ரிலீசாகும் உலகநாயகனின் திரைப்படம்…! post thumbnail image
கமல் நடித்து ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் ‘உத்தம் வில்லன்’. கமல் இரட்டை வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் நாயகிகளாக பூஜா குமார், மற்றும் ஆண்ட்ரியா நடிக்கின்றனர்..

திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை இணைந்து தயாரிக்கிறார் கமல். படத்திற்கு கிரேஸி மோகன் வசனம் எழுத, ஜிப்ரான் இசையமைக்கிறார்.’உத்தம் வில்லன்’ படத்தின் வெளியீட்டிற்குப் பிறகே ‘விஸ்வரூபம்- 2 ‘ படத்தை வெளியிடுவேன் என கமல் அறிவித்திருந்தார். அதன்படி, தற்போது ‘உத்தம வில்லன்’ படத்தின் வெளியீடு எப்போது என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

காந்தி பிறந்தநாள் மற்றும் நவராத்திரி விழாக்களின் ஆரம்ப நாளான அக்டோபர் 2ம் தேதி ‘உத்தம வில்லன்’ வெளியாக உள்ளது.

பாலசந்தர், ஜெயராம், பார்வதி, பார்வதி நாயர் ஆகியோர் நடிக்கும் இப்படத்தின் வெளியீட்டிற்காக கேரளாவின் மிகப்பெரும் தமிழ் பட வசூல் திரையரங்கமான எர்ணாக்குளம் ஷெனாய்ஸில் தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது.

‘விஸ்வரூபம்’ படத்தை அடுத்து மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் இந்தப் படத்தின் இசை செப்டம்பர் மாதம் வெளியாகும் என கூடுதல் தகவல் கிடைத்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி