பத்து நாளில் 13 கோடி வசூலித்த ‘த்ரிஷ்யம்’!…

விளம்பரங்கள்

சென்னை:-மலையாளத்தில் பெரும் வசூலைத் குவித்த ‘த்ரிஷ்யம்’, தொடர்ந்து கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெற்றியையும் வசூலையும் குவித்து வருகிறது. மற்ற மொழிகளில் தயாரான போது யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத சூழ்நிலையில் தற்போது தமிழில் கமல்ஹாசன் நடிப்பதாலேயே இந்தப் படத்திற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றம் வரை சென்று தடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

தமிழில் கமல்ஹாசன் நடித்து வெளியாகும் பட்சத்தில் படத்திற்கு மிகப் பெரும் வசூல் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்கிறார்கள். அதைக் கருத்தில் கொண்டே தற்போது ‘த்ரிஷ்யம்’ தமிழ் ரீமேக்கிற்கு சிலர் பிரச்சனையை ஏற்படுத்துவதாக கோலிவுட்டில் சொல்கிறார்கள்.இதனிடையே பத்து நாட்களுக்கு முன் தெலுங்கில் வெளியான ‘த்ரிஷயம்’ திரைப்படம் உலக அளவில் சுமார் 13 கோடி ரூபாயை வசூல் செய்து கொடுத்துள்ளதாம். ஆந்திரா, தெலுங்கானாவில் மட்டும் 10 கோடி ரூபாயும், மற்ற மாநிலங்கள், மற்ற நாடுகள் என்ற வகையில் சுமார் 3 கோடி ரூபாயும் வசூல் கிடைத்துள்ளதாம்.

வரும் வாரங்களில் இந்த வசூல் தொகை கொஞ்சம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், தொலைக்காட்சி உரிமை மற்றும் சில வியாபாரங்களால் மேலும் சில கோடிகள் கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள். மலையாளம், கன்னடத்தில் பெற்ற வெற்றியும், வசூலும் தெலுங்கில் இல்லை என்றும் ஒரு சாரார் சொல்கிறார்கள். ஆனாலும், படத்தின் பட்ஜெட் குறைவாக இருப்பதால் தயாரிப்பாளருக்கும், வாங்கியவர்களுக்கும் கை நிறைய லாபம் கிடைப்பது உறுதியாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: