செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் சீனாவில் பரவும் பிளேக் நோய்!…ஒரு நகரத்துக்கு சீல் வைப்பு…

சீனாவில் பரவும் பிளேக் நோய்!…ஒரு நகரத்துக்கு சீல் வைப்பு…

சீனாவில் பரவும் பிளேக் நோய்!…ஒரு நகரத்துக்கு சீல் வைப்பு… post thumbnail image
பெய்ஜிங்:-சுமார் 65 ஆண்டுகளுக்கு முன்பு பிளேக் என்ற உயிர்க் கொல்லி நோய் உலகை ஆட்டிப்படைத்தது. எலிகள் மூலம் பரவும் இந்த நோய்க்கு கொத்து கொத்தாக மக்கள் செத்து மடிந்தனர்.அதற்கு சக்தி வாய்ந்த மருந்து கண்டு பிடித்து அந்த நோயை விஞ்ஞானிகள் அழித்தனர். இந்த நிலையில் தற்போது சீனாவில் இந்த நோய் மீண்டும் பரவ தொடங்கியுள்ளது.

வட மேற்கு சீனாவின் கான்சூ மாகாணத்தில் யூமென் என்ற நகரில் கொடிய பிளேக் நோய் மக்களை தாக்கியுள்ளது. இந்த நோய்க்கு கடந்த வாரம் ஒருவர் பலியானார்.151 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே அங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பிளேக் நோய் பரவியுள்ள யூமென் நகரத்தில் சுமார் 30 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இது ஒரு தொற்று நோய் என்பதால் இங்கிருந்து மக்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.அதே போன்று வேறு பகுதிகளில் இருந்தும் இங்கு பொதுமக்கள் வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அந்த நகரின் எல்லைகள் அடைக்கப்பட்டுள்ளன. முக்கியமான பிரதான சாலைகளை போலீசார் அடைத்து வைத்துள்ளனர்.இந்த நகரை தாண்டி செல்பவர்கள் வேறு மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மொத்தத்தில் யூமென் நகரம் முற்றிலும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி