செய்திகள்,விளையாட்டு காமன்வெல்த் தொடக்க விழாவில் சச்சின் தெண்டுல்கர் பங்கேற்பு!…

காமன்வெல்த் தொடக்க விழாவில் சச்சின் தெண்டுல்கர் பங்கேற்பு!…

காமன்வெல்த் தொடக்க விழாவில் சச்சின் தெண்டுல்கர் பங்கேற்பு!… post thumbnail image
கிளாஸ்கோ:-20–வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் இன்று தொடங்குகிறது. ஆகஸ்ட் 3ம் தேதி வரை 12 நாட்கள் இந்த விளையாட்டு திருவிழா நடக்கிறது.இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை உள்ளிட்ட 71 நாடுகளில் இருந்து 4947 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். மொத்தம் 17 வகை விளையாட்டுகளில் 261 தங்கப் பதக்கம் வழங்கப்படுகிறது.

கடந்த 2010–ம் ஆண்டு டெல்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டில் போட்டியில் இந்தியா 39 தங்கம் உள்பட 101 பதக்கம் பெற்று 2–வது இடத்தை பிடித்தது. அதே மாதிரி இந்த முறையும் அதிக பதக்கங்கள் வெல்லும் வேட்கையுடன் இந்திய அணி திகழ்கிறது.இந்தியா சார்பில் 215 பேர் கொண்ட குழு காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கிறது. தடகளம், ஆக்கி, நீச்சல், குத்துச்சண்டை, மல்யுத்தம், பேட்மின்டன், சைக்கிளிங், ஜிம்னாஸ்டிக்ஸ், ஜூடோ, லான்பவ்லஸ், ஸ்குவாஷ், டேபிள் டென்னிஸ், பளு தூக்குதல், துப்பாக்கி சுடுதல் ஆகிய 14 வகை விளையாட்டில் கலந்து கொண்டது. ரக்பி செவன்ஸ், நெட்பால், டிரையத்லான் ஆகிய போட்டிகளில் இந்தியா பங்கேற்கவில்லை.

இந்திய நேரடிப்படி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு தொடக்க விழா நடக்கிறது. இங்கிலாந்து ராணி எலிசபெத் வாழ்த்துரை செய்தியை வாசித்து போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கிறார்.கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் தொடக்க விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார். ஐ.நா. சபையின் குழந்தைகள் நலனுக்கான ‘யுனிசெப்’ தூதர் என்ற முறையில் அவர் பங்கேற்க உள்ளார்.தொடக்க விழா 3 மணி நேரம் நடைபெறும். 2 ஆயிரம் நடன கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். டென் ஸ்போர்ட்ஸ், தூர்தர்சன் செய்தி சேனல்களில் இந்த போட்டியை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி