டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீரர்கள் முன்னேற்றம்!…

விளம்பரங்கள்

துபாய்:-டெஸ்ட் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2வது டெஸ்ட்டில் கலக்கிய இஷாந்த் சர்மா, புவனேஸ்வர்குமார், முரளி விஜய், ரகானே தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

7 விக்கெட் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருது பெற்று இஷாந்த் சர்மா 3 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது 20–வது இட வரிசையை பெற்றுள்ளார். அவர் 3 இடங்கள் முன்னேறி உள்ளார். லார்ட்ஸ் டெஸ்ட்டில் 6 விக்கெட்டை கைப்பற்றிய புவனேஸ்வர் குமார் 12 இடங்கள் முன்னேறி 34–வது இடத்தை பிடித்துள்ளார்.இந்திய பவுலர்களில் அஸ்வின் முன்னணியில் உள்ளார். அவர் 11–வது இடத்தில் உள்ளார்.

லார்ட்ஸ் டெஸ்ட்டில் 95 ரன் எடுத்த தமிழக வீரர் முரளி விஜய் 11 இடங்கள் முன்னேறி 19–வது இடத்தை பிடித்துள்ளார். சதம் அடித்த ரகானே 11 இடங்கள் முன்னேறி 35–வது வரிசையை பெற்றுள்ளார்.
அதிகபட்சமாக புஜாரா 8–வது இடத்திலும், வீராட்கோலி 14–வது இடத்திலும் உள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: