கமல் நடிக்கும் திரிஷ்யம் படத்திற்கு கோர்ட் தடை!…

விளம்பரங்கள்

சென்னை:-மோகன்லால், மீனா ஜோடியாக நடித்து மலையாளத்தில் வெள்ளிகரமாக ஓடிய படம் திரிஷ்யம். 100 நாட்கள் தாண்டி ஓடி ரூ.50 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது.இப்படம் தெலுங்கில் வெங்கடேஷ், மீனா ஜோடியாக நடிக்க ரீமேக் செய்யப்பட்டு சமீபத்தில் ரிலீசானது. அங்கும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது.

தமிழிலும் கமல், கவுதமி ஜோடியாக நடிக்க திரிஷ்யம் ரீமேக் ஆகிறது. இதற்கான படபூஜை கடந்த வாரம் சென்னையில் நடந்தது. இதில் கமல் கலந்து கொண்டார்.இதில் பெண் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க ஸ்ரீதேவியிடம் பேசி உள்ளனர். அடுத்த மாதம் படப்பிடிப்பு துவங்க இருந்தது.இந்நிலையில் திரிஷ்யம் படத்தை தமிழில் ரீமேக் செய்வதற்கு கோர்ட்டு தடை விதித்துள்ளது.
கூத்தமங்கலத்தைச் சேர்ந்த சதீஷ்பால் என்பவர் எர்ணாகுளம் மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் ‘திரிஷ்யம்’ படத்தை தமிழில் ரீமேக் செய்வதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:–

திரிஷ்யம் படம் நான் எழுதிய ஒரு மழைக்காலத்து என்ற கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. இந்த கதைக்கான உரிமை என்னிடம் தான் இருக்கிறது. ரீமேக் செய்யும் உரிமையும் எனக்கே இருக்கிறது.என் அனுமதி பெறாமல் திரிஷ்யம் படத்தை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டு உள்ளனர். இது எனக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும். எனவே தமிழில் ரீமேக் செய்ய தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் குறிப்பிட்டு இருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி திரிஷ்யம் படத்தை தமிழில் ரீமேக் செய்ய கூடாது என தடை விதித்து உத்தரவிட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: