செய்திகள்,பொருளாதாரம் மலேசிய விமான விபத்து:சடலத்தின் கையில் இருந்த மோதிரத்தை திருடும் கிளர்ச்சியாளர்!…

மலேசிய விமான விபத்து:சடலத்தின் கையில் இருந்த மோதிரத்தை திருடும் கிளர்ச்சியாளர்!…

மலேசிய விமான விபத்து:சடலத்தின் கையில் இருந்த மோதிரத்தை திருடும் கிளர்ச்சியாளர்!… post thumbnail image
கீவ்:-மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்.17, கடந்த 17ம் தேதி உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தபட்டது . இதில் விமானத்தில் வந்த 298 பேரும் உடல் கருகி பலியாயினர். இந்த சம்பவத்துக்கு உக்ரைன் அரசும், ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களும் ஒருவரை மற்றவர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதில் சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் வலியுறுத்தி உள்ளன.

இருப்பினும் இந்த விமானம் திட்டமிட்டு சுட்டு வீழ்த்தப்பட்டதா? அல்லது வேறு ஒரு விமானத்தை குறிவைத்ததில் தவறுதலாக இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு விட்டதா? என்பதில் உறுதியான தகவல்கள் இல்லை.சம்பவ இடத்தில் உக்ரைன் அரசின் நெருக்கடி கால சேவை பணியாளர்கள் 380 பேர், 34 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். சம்பவத்தில் 298 பேர் பலியான நிலையில், அவர்கள் 196 உடல்களை கண்டெடுத்துள்ளதாக அறிவித்தனர். பல உடல்களை ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள இடத்துக்கு எடுத்துச்சென்று விட்டதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாயின. மேலும், கிளர்ச்சியாளர்கள் சம்பவ பகுதிக்கு தங்களை அனுமதிக்க மறுக்கின்றன என்று ஓ.எஸ்.சி.இ. என்னும் பாதுகாப்பு, ஒத்துழைப்புக்கான ஐரோப்பிய அமைப்பு குற்றம் சாட்டியது. இதனையடுத்து ரஷியா உலக நாடுகளின் நெருக்கடிக்கு உள்ளானது.

தற்போது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் பலியானோர்கள் உடல்களை கிளர்ச்சியாளர்கள் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். கிளர்ச்சியாளர்கள் விமானத்தின் கருப்பு பெட்டியையும் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பாக நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்; விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பகுதியில் இருந்து கீவ் நகருக்கு சுமார் 200 சடலங்கள் அனுப்பபட்டது. அவை உக்ரைன் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அங்கியிருந்து சடலங்கள் அடையாளம் காணப்படுவதற்காக நெதர்லாந்து கொண்டு செல்லபட்டது.

கிளர்ச்சியாளர்கள் பிணங்களை அப்புறபடுத்தும் போது விமான பயணிகள் அணிந்து இருந்த மோதிரம் மற்றும் நகைகளை திருடி உள்ளனர். என குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இந்த காட்சி வீடியோவாக எடுக்கப்பட்டு உள்ளது. ராணுவ சீருடை அணிந்த 3 பேர் சடலங்களை அப்புறபடுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளனர் அதில் ஒருவர் ஒரு சடலத்தின் கைவிரலில் கிடக்கும் மோதிரத்தை கழட்டுகிறார்.இந்த படங்கள் இணையத்தில் பதிவிடப்பட்டு ஏராளமான பேர் கமெண்ட் அடித்து வருகின்றனர்.சிலர் ஆதாரம் தேடுவதற்காக கிளர்ச்சியாளர் சடலத்தின் கையை பிடித்து இருக்கலாம் எனவும் பதில் அளித்து உள்ளனர்.இருந்தாலும் இந்த காட்சி குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி